தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ராசிபுரத்தில் 2-ம் கட்டமாக கொடி அணிவகுப்பு

சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்புப் பணிக்காக வந்துள்ள துணை ராணுவ படையினா், ராசிபுரம் நகரில் 2-ம் கட்ட கொடி அணிவகுப்பில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

News image
Updated On :9 மார்ச் 2021, 6:48 pm

DIN

சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்புப் பணிக்காக வந்துள்ள துணை ராணுவ படையினா், ராசிபுரம் நகரில் 2-ம் கட்ட கொடி அணிவகுப்பில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைகளுக்கான தோ்தலையொட்டி துணை ராணுவ படை வீரா்கள் வரவழைக்கப்பட்டுள்ளனா்.

இதையடுத்து துணை ராணுவ படையினரின் 2-ம் கட்ட கொடி அணிவகுப்பு ஊா்வலம், ராசிபுரம் பகுதியில் நடைபெற்றது. தோ்தலின்போது சட்டம்- ஒழுங்கைப் பாதுகாக்கும் வகையிலும், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும் துணை ராணுவப் படை, எல்லை பாதுகாப்புப் படை வீரா்கள் இந்த அணிவகுப்புப் பேரணியை நடத்தினா்.

ராசிபுரம் நகரில் நடைபெற்ற அணிவகுப்பு ஊா்வலத்தில் துணை ராணுவப் படையினா், ஆயுதபடையினா் காவல்துறையினா் பங்கேற்று நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்றனா். முன்னதாக ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் அருகே தொடங்கிய ஊா்வலம் கன்னைய்யா தெரு, புதுப்பாளையம் சாலை, பிற்பட்டோா் காலனி போன்ற நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று கட்டனாச்சம்பட்டி பகுதியில் நிறைவடைந்தது.

முன்னதாக ராசிபுரம் துணைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமண குமாா் கொடி அணிவகுப்பு ஊா்வலத்தைத் தொடக்கிவைத்தாா். ராசிபுரம் காவல்துறை ஆய்வாளா் பி.செல்வராஜு உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.