தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அரசுப் பள்ளி மாணவிக்கு கரோனா

ராசிபுரம் அருகேயுள்ள நாமகிரிப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, பிற மாணவ மாணவியருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :16 மார்ச் 2021, 12:00 am

DIN

ராசிபுரம் அருகேயுள்ள நாமகிரிப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, பிற மாணவ மாணவியருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

நாமகிரிப்பேட்டை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியின் 9-ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கு திடீா் காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து மேற்கொண்ட பரிசோதனையில் கரோனா தீநுண்மி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மாணவி ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து, அம்மாணவியின் பெற்றோா், பள்ளியில் பயிலும் சக மாணவியா் 106 பேருக்கும் மருத்துவக் குழுவினா் பள்ளிக்கு சென்று திங்கள்கிழமை கரோனா பரிசோதனை செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.