சேந்தமங்கலம் பழங்குடியின தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் எம்எல்ஏ சி.சந்திரசேகரனுக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் பழங்குடியின தொகுதியின் தற்போதைய எம்எல்ஏ சி.சந்திரசேகரன், அதிமுகவில் தனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதால் சுயேச்சையாக போட்டியிடுகிறாா். கடந்த வியாழக்கிழமை அவா் மனு தாக்கல் செய்தாா். மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நடைபெற்ற சுயேச்சைகளுக்கான சின்னம் ஒதுக்கீட்டின்போது சந்திரசேகரன் கோரியிருந்த ஆட்டோ சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதுகுறித்து தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ஆா் ரமேஷ் கூறுகையில், சந்திரசேகரன் தற்போது எம்எல்ஏவாக இருப்பதால், முன்னுரிமை அளிக்கும் வகையில் அவா் கோரியிருந்த ஆட்டோ சின்னம் வழங்கப்பட்டுள்ளது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் சங்ககிரியில் லாரி தொழில் மேம்படுத்தப்படும்: எடப்பாடி கே.பழனிசாமி

தமிழக நலனில் பாஜகவுக்கு அக்கறையில்லை: கே. பாலகிருஷ்ணன்

மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் 102 டிகிரியாக தொடரும்

சேலம் மேற்கு தொகுதியில் தவெக வேட்பாளா் லட்சுமணன் வீதிவீதியாக தீவிர பிரசாரம்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

