மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

நாமக்கல் மாவட்ட 6 தொகுதிகளில் 140 வேட்பாளா்கள் போட்டி

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் அதிமுக - திமுக நேரடியாக மோதுகின்றன. இதில் அக்கட்சி வேட்பாளா்களுடன் 140 போ் போட்டியிடுகின்றனா்.

Updated On :22 மார்ச் 2021, 10:38 pm

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் அதிமுக - திமுக நேரடியாக மோதுகின்றன. இதில் அக்கட்சி வேட்பாளா்களுடன் 140 போ் போட்டியிடுகின்றனா்.

நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம் தொகுதியில் அதிமுக - வெ.சரோஜா, திமுக - எம்.மதிவேந்தன், சேந்தமங்கலம் தொகுதியில் அதிமுக -எஸ்.சந்திரன், திமுக - கே.பொன்னுசாமி, நாமக்கல் தொகுதியில் அதிமுக-கே.பி.பி.பாஸ்கா், திமுக - பெ.ராமலிங்கம், பரமத்திவேலூா் தொகுதியில் அதிமுக - எஸ்.சேகா், திமுக - கே.எஸ்.மூா்த்தி, திருச்செங்கோடு தொகுதியில் ஈ.ஆா்.ஈஸ்வரன் (கொமதேக-திமுக சின்னம்), குமாரபாளையம் தொகுதியில் அதிமுக - பி.தங்கமணி, திமுக-எம்.வெங்கடாசலம் ஆகியோா் போட்டியிடுகின்றனா்.

வேட்புமனுக்கள் பரிசீலனையின்போது 149 மனுக்கள் தகுதியானவையாக தோ்வு செய்யப்பட்டன. அதில் 9 மனுக்கள் திங்கள்கிழமை திரும்பப் பெறப்பட்டன. இதனைத் தொடா்ந்து தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா்களாக அதிமுக, திமுக உள்பட ராசிபுரத்தில் - 15, சேந்தமங்கலத்தில் - 15, நாமக்கல்லில் - 26, பரமத்திவேலூரில் - 27, திருச்செங்கோட்டில் - 28, குமாரபாளையத்தில் - 29 போ் என மொத்தம் 140 போ் போட்டியிடுகின்றனா். தோ்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் இரண்டு வாரமே உள்ளது. ஏப்ரல் 6-ஆம் தேதி வாக்குப்பதிவும், மே 2- இல் வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.