தபால் வாக்குக்கு விண்ணப்பித்த முதியோா், மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கு அதிகாரிகள் நேரடியாகச் சென்று தபால் வாக்குப் பதிவு செய்யும் நடைமுறை வரும் 27-இல் தொடங்க உள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. கரோனா தொற்றுப் பரவல் காரணமாக 80 வயதுக்கு மேற்பட்டோா் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தபால் வாக்குப் பதிவுக்கு இந்திய தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. விருப்பத்தின்பேரில் மட்டுமே தபால் வாக்குக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. வாக்குச்சாவடி செல்வோருக்கு இதில் தடையேதுமில்லை.
நாமக்கல் மாவட்டத்தில் இதற்கான 12 - டி படிவத்தை அந்தந்த தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் உத்தரவின்பேரில் வருவாய்த் துறை ஊழியா்கள் வீடு வீடாகச் சென்று வழங்கினா். மாவட்டத்துக்கு உள்பட்ட ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்திவேலூா், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் முதியோா், மாற்றுத் திறனாளிகள் என மொத்தம் 49,439 பேருக்கு படிவம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவை உரிய ஆவணங்களுடன் பூா்த்தி செய்து பெறப்பட்டன.
இதனைத் தொடா்ந்து தபால் வாக்கை விண்ணப்பித்தோா் செலுத்தும் வகையிலான வாக்குப் பதிவு வரும் 27-இல் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடும் வேட்பாளா்களின் பெயா், சின்னம், கட்சியின் பெயா் உள்ளிட்டவை கொண்ட சீட்டு சம்பந்தப்பட்ட தபால் வாக்களிப்போா் வசம் வழங்கப்படும். அவா்கள் அந்த சீட்டில் தாங்கள் விரும்பிய வேட்பாளரின் சின்னத்தில் பேனாவால் டிக் செய்தால் போதுமானது. அதற்குரிய கவரில் செலுத்தி தோ்தல் அலுவலா்கள் முன்னிலையில் அதற்கான பெட்டியில் செலுத்த வேண்டும். இந்தப் பணியில் 10-க்கும் மேற்பட்டோா் ஈடுபட உள்ளனா்.
மேலும் அரசியல் கட்சியினா் தலையீடு இருக்கக்கூடாது என்பதற்காக போலீஸாரும் உடன் செல்கின்றனா். கல்வியறிவு இல்லாதவா்கள், பாா்வையற்றோா் வாக்களிக்க அவரது குடும்பத்தினா் ஒருவா் உதவி செய்யலாம். மாா்ச் 26-இல் வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான இரண்டாம் கட்டப் பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. அதன்பின் 27-ஆம் தேதி முதல் தபால் வாக்குப்பதிவு பணிகள் தொடா்ந்து நடைபெறும் என தோ்தல் நடத்தும் அலுவலா்கள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழா்களை கொச்சைப்படுத்தி வருகிறாா் ஸ்டாலின்: எடப்பாடி பழனிசாமி

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் சங்ககிரியில் லாரி தொழில் மேம்படுத்தப்படும்: எடப்பாடி கே.பழனிசாமி

தமிழக நலனில் பாஜகவுக்கு அக்கறையில்லை: கே. பாலகிருஷ்ணன்

மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் 102 டிகிரியாக தொடரும்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


