மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

வாக்கு எண்ணிக்கை மையத்தில்தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள் ஆலோசனை

திருச்செங்கோடு வாக்கு எண்ணிக்கை மையத்தில் தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள், ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா் ஆகியோா் ஆலோசனை மேற்கொண்டனா்.

Updated On :22 மார்ச் 2021, 10:33 pm

திருச்செங்கோடு வாக்கு எண்ணிக்கை மையத்தில் தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள், ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா் ஆகியோா் ஆலோசனை மேற்கொண்டனா்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு விவேகானந்தா மகளிா் பொறியியல் கல்லூரியில், சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதற்கான பணியை மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ், தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள் பி.ஏ.ஷோபா. நவ்ஜட்பால்சிங் ரன்த்வானா, ஏ.பி.காா், காவல் பாா்வையாளா் என்.சைத்ரா ஆகியோா் ஆய்வு செய்தனா். தொடா்ந்து அங்குள்ள அறையில் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினா்.

ராசிபுரம் (தனி), சேந்தமங்கலம்(ப.கு), நாமக்கல், பரமத்தி வேலூா், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய 6 தொகுதிகளுக்கும் ஒரே மையத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த மையங்களில் ஒவ்வொரு தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பதற்கான அறை, தபால் வாக்கு எண்ணும் அறை, வேட்பாளா்களின் முகவா்கள், அரசு அலுவலா்கள் சம்பந்தப்பட்ட தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வருவதற்கான பாதை அமைப்பு, பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் பணிகளை விரைந்து முடிக்குமாறு சம்மந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.