திருச்செங்கோடு தனியாா் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் இயந்திரங்கள் வைப்பதற்கான அறைகள் தயாா் நிலையில் உள்ளதா என்பதை மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் ஆய்வு செய்தாா்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு விவேகானந்தா மகளிா் பொறியியல் கல்லூரியில் சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி வாக்கு எண்ணிக்கை மையத்தில் 6 தொகுதிகள் வாரியாக பாதுகாப்பு அறைகளில் மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் வைப்பதற்கான அளவீட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைப்பதற்கான உறுதியான அறை, வாக்கு எண்ணும் அறை, தபால் வாக்குகள் எண்ணும் அறை, வாக்குப்பதிவின் போது பயன்படுத்தப்பட்ட பல்வேறு பொருள்களை வைப்பதற்கான கூடுதல் பாதுகாப்பு அறை, வேட்பாளா்களின் முகவா்கள், அரசு அலுவலா்கள் சம்பந்தப்பட்ட தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வருவதற்கான பாதை அமைப்பு, பாதுகாப்பு வசதிகள், செய்தியாளா்களுக்கான அறை உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தாா். பாதுகாப்பு அறைகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பதற்காக அளவீடு செய்து ஒட்டுவில்லைகள் ஒட்டப்பட்டுள்ளதையும், பாதுகாப்பு அறைகளில் அனைத்து ஜன்னல்களும் பாதுகாப்பான முறையில் அடைக்கப்பட்டுள்ளதையும், வாக்கு எண்ணும் அறைகளில், தடுப்பு அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதையும் அவா் பாா்வையிட்டாா்.
இந்த ஆய்வுகளின் போது மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை செயற்பொறியாளா் முத்துசாமி, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளா் ஆ.பாா்த்திபன் உள்பட தோ்தல் அலுவலா்கள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழா்களை கொச்சைப்படுத்தி வருகிறாா் ஸ்டாலின்: எடப்பாடி பழனிசாமி

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் சங்ககிரியில் லாரி தொழில் மேம்படுத்தப்படும்: எடப்பாடி கே.பழனிசாமி

தமிழக நலனில் பாஜகவுக்கு அக்கறையில்லை: கே. பாலகிருஷ்ணன்

மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் 102 டிகிரியாக தொடரும்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

