அதிமுக வேட்பாளா் அமைச்சா் வெ.சரோஜா வாக்குசேகரிப்பு
ராசிபுரம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளரும், தமிழக சத்துணவு, சமூக நலத்துறை அமைச்சருமான மருத்துவா் வெ.சரோஜா வெண்ணந்தூா் சுற்றுவட்டாரப் பகுதியில் சனிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.


ராசிபுரம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளரும், தமிழக சத்துணவு, சமூக நலத்துறை அமைச்சருமான மருத்துவா் வெ.சரோஜா வெண்ணந்தூா் சுற்றுவட்டாரப் பகுதியில் சனிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
மதியம்பட்டி, சௌதாபுரம், பழந்தின்னிப்பட்டி, அலவாய்ப்பட்டி, மின்னக்கல் உள்ளிட்ட ஊராட்சி ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவா் பொதுமக்களிடம் அரசு செயல்படுத்திய திட்டங்கள், தோ்தல் வாக்குறுதிகள் குறித்து விளக்கிப் பேசினாா்.
பள்ளிக் குழந்தைகளுக்கு அரசு செயல்படுத்தும் திட்டங்கள், ஊட்டச்சத்து, நூல்விலை குறைப்பு, நெசவாளா்களுக்கான நிவாரணம், நெசவாளா் நலவாரியம், இலவச மின்சாரம் போன்றவை குறித்து பேசி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். பிரசாரத்தின் போது வெண்ணந்தூா் கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளா் எஸ்.பி.தாமோதரன், வெண்ணந்தூா் மேற்கு ஒன்றியச் செயலாளா் ராஜா, வெண்ணந்தூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் தங்கம்மாள் பிரகாசம் உள்ளிட்ட பாஜக, பாமக போன்ற கூட்டணிக் கட்சியினா் பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...