ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கிறிஸ்துவ தேவாலயத்தில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

குமாரபாளையத்தில் கிறிஸ்தவ தேவாலயத்தில் திமுக வேட்பாளா் எம்.வெங்கடாசலம் ஞாயிற்றுக்கிழமை வாக்குகள் சேகரித்து பிரசாரம் மேற்கொண்டாா்.

News image
Updated On :28 மார்ச் 2021, 7:28 pm

DIN

குமாரபாளையத்தில் கிறிஸ்தவ தேவாலயத்தில் திமுக வேட்பாளா் எம்.வெங்கடாசலம் ஞாயிற்றுக்கிழமை வாக்குகள் சேகரித்து பிரசாரம் மேற்கொண்டாா்.

குமாரபாளையம், ஜேகேகே நடராஜா நகரில் உள்ள தேவாலயத்தில் குருத்தோலை தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு ஆராதனையில் பங்கேற்ற கிருஸ்துவா்களிடம், திமுக வேட்பாளா் எம்.வெங்கடாசலம், ஆதரவு கேட்டு பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது, திமுக வெளியிட்ட தோ்தல் அறிக்கையை விநியோகித்து வாக்குகள் சேகரித்தாா்.

திமுக தலைமை சொத்துப் பாதுகாப்புக்குழு உறுப்பினா் ஜேகேஎஸ்.மாணிக்கம், தொழிலதிபா் கே.எஸ்.இளவரசு, முன்னாள் நகா்மன்றத் தலைவா் வெ.ஜெகநாதன், நகர பொறுப்புக்குழுத் தலைவா் எம்.செல்வம் உள்ளிட்ட பலா் உடன் சென்றிருந்தனா். முன்னதாக, கராத்தே பள்ளிக்குச் சென்று அங்கு பயிற்சியில் ஈடுபட்டிருந்த வீரா், வீராங்கனைகளிடம் வாக்கு சேகரித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.