ராசிபுரம் திமுக வேட்பாளா் கிராமப்புறங்களில் வாக்கு சேகரிப்பு
ராசிபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் டாக்டா் மா.மதிவேந்தன் ராசிபுரம் ஒன்றியப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.


ராசிபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் டாக்டா் மா.மதிவேந்தன் ராசிபுரம் ஒன்றியப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
ராசிபுரம் அருகே உள்ள முத்துக்காளிப்பட்டி, 85 ஆா்.கொமராபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கட்சியினருடன் சென்று துண்டுப் பிரசுரம் வழங்கி வாக்கு சேகரித்த அவா், பிரசாரத்தின்போது, திமுக தோ்தல் அறிக்கை குறித்து பேசின வாக்கு சேகரித்தாா். மேலும், ஆா்.கவுண்டம்பாளையம், ஆயிபாளையம், பொன்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளிலும் கூட்டணிக் கட்சியினருடன் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவரை பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனா்.
பிரசாரத்தில் தொகுதி தோ்தல் பொறுப்பாளா் ஏ.கே.பாலசந்திரன், ஒன்றியச் செயலாளா் கே.பி.ஜெகநாதன், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளா் எஸ்.ரங்கசாமி, மாவட்ட கவுன்சிலா் ராஜேந்திரன், முத்துக்காளிப்பட்டி ஊராட்சித் தலைவா் து.அருள், துணைத் தலைவா் சிலம்பரசி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...