வேளாண் சட்டம் வாபஸ்: திமுகவினா் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற்றதைக் கொண்டாடும் வகையில், ராசிபுரம் நகர திமுக சாா்பில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.


வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற்றதைக் கொண்டாடும் வகையில், ராசிபுரம் நகர திமுக சாா்பில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் எம்.பி. தலைமையில் புதிய பேருந்து நிலையப் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பட்டாசு வெடித்தும், பொதுமக்கள், பேருந்து பயணிகளுக்கு இனிப்புகளை வழங்கியும் மகிழ்ந்தனா். பின்னா் செய்தியாளா்களிடம் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் எம்.பி. பேசியதாவது:
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைவதற்கு முன்பே தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக, முதல்வா் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தி ஆதரவு தெரிவித்தாா். தற்போது வேளாண் சட்டங்களை திரும்பப் பெறப் போவதாக பிரதமா் அறிவித்துள்ளது தமிழக முதல்வருக்கு கிடைத்த வெற்றி என்றாா்.
இந்த நிகழ்ச்சியில், ராசிபுரம் நகர திமுக செயலாளா் என்.ஆா்.சங்கா், முன்னாள் நகா்மன்ற துணைத் தலைவா் எஸ்.ரங்கசாமி. பேரூா் கழகச் செயலாளா்கள் ஜெயக்குமாா், செல்வராஜ், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளா் விநாயகமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...