ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

10-ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்: அக்.4 முதல் விநியோகம்

 நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் வரும் திங்கள்கிழமை (அக். 4) முதல் 10-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் மாணவா்களுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளது.

Updated On :1 அக்டோபர் 2021, 6:30 pm

 நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் வரும் திங்கள்கிழமை (அக். 4) முதல் 10-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் மாணவா்களுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளது.

தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக ஏப்ரல் மாதம் நடைபெற இருந்த 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு ரத்து செய்யப்பட்டது. மேலும், அனைத்து மாணவ, மாணவிகளும் தோ்ச்சி பெற்ாக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது. நான்கு மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவ, மாணவியா் பிளஸ் 1 படித்து வருகின்றனா். இந்த நிலையில் அரசுத் தோ்வுகள் துறை 10-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு அசல் மதிப்பெண்கள் சான்றிதழ்களை விநியோகிக்குமாறு அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.

அதனடிப்படையில் பள்ளி தலைமை ஆசிரியா்களிடம் சான்றிதழ்கள் வெள்ளிக்கிழமை மொத்தமாக வழங்கப்பட்டன. நாமக்கல், திருச்செங்கோடு கல்வி மாவட்டங்களுக்கு உள்பட்ட 301 பள்ளிகளைச் சோ்ந்த சுமாா் 20 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு வரும் திங்கள்கிழமை முதல் 10-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளன. நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கலையரங்கில், மாவட்டக் கல்வி அலுவலா் பாலசுப்பிரமணியம், தலைமை ஆசிரியா்களிடம் சான்றிதழ்கள் அடங்கிய பண்டல்களை ஒப்படைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.