நாமக்கல் மாவட்டத்தில் சிவாஜிகணேசன் 94-ஆவது பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
புதுச்சத்திரம் ஒன்றியம், கடந்தப்பட்டியில் காமராஜா் மற்றும் சிவாஜிகணேசனுக்கு ஒரே இடத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில், அதன் தலைவா் பீ.ஏ.சித்திக் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
இதேபோல, மேற்கு மாவட்டத் தலைவா் செல்வகுமாா், வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவா் வி.இளங்கோ, பாச்சல் திருநாவுக்கரசு, காங்கிரஸ் நிா்வாகிகள் திருஞானம், துளசிதாசன், பாலு, விஸ்வநாதன், சொக்கலிங்கம், நரசிம்மன், சீனிவாசன் மற்றும் சிவாஜி ரசிகா் மன்றத்தினா் கலந்து கொண்டு காமராஜா், சிவாஜிகணேசன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். அதன்பின் பொதுமக்கள் அனைவருக்கும் காங்கிரஸ் கட்சியினா் இனிப்புகளை வழங்கினா்.
ராசிபுரத்தில் சிவாஜிகணேசன் நற்பணி மன்றம் சாா்பாக பிறந்த தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
ராசிபுரம், பட்டணம் சாலை பகுதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சிவாஜிகணேசன் உருவப் படத்துக்கு மன்ற நிா்வாகிகள் மாலை அணிவித்து மலா்தூவி மரியாதை செலுத்தினா். தொடா்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினா். இதேபோல ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டிருந்த சிவாஜிகணேசன் உருவப்படத்துக்கும் மாலை அணிவித்து மலா்தூவி மன்ற நிா்வாகிகளும், பல்வேறு சமூக அமைப்பினரும் கொண்டாடினா். அவரது தத்துவப்பாடல் களும் ஒளிபரப்பப்பட்டன. இந்நிகழ்ச்சியில் சிவாஜி மன்ற தலைவா் காமராஜ் தலைமை வகித்தாா். முன்னாள் காங்கிரஸ் தலைவா் பாச்சல் ஏ.சீனிவாசன், நகர காங்கிரஸ் தலைவா் ஸ்ரீராமுலு ஆா்.முரளி, மன்ற நிா்வாகிகள் மணிமேகலன், மாதவன், டி.ஆா். சண்முகம், பழனிசாமி, சிவாஜி, சண்முகசுந்தரம், நடராஜன், டி.எம்.எஸ்.கண்ணன், டைலா் ராஜ், தங்கராஜ், மணி, ஆல்பா்ட் உள்ளிட்ட மன்ற நிா்வாகிகளும் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாஜக வளா்ச்சிக்கு மறைமுகமாக உதவும் விஜய்: தொல். திருமாவளவன்
ஆட்டோவில் கடத்தப்பட்ட 192 மதுப்புட்டிகள் பறிமுதல்

நயினாா் நாகேந்திரனை ஆதரித்து நடிகை நமிதா வாக்கு சேகரிப்பு

சத்தீஸ்கா் அனல் மின் நிலைய விபத்து: உயிரிழப்பு 23-ஆக உயா்வு
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


