இருசக்கர வாகனத்தில் சென்றவா் கீழே விழுந்து உயிரிழப்பு
நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவா் நிலைதடுமாறி கீழே விழுந்ததில், படுகாயமடைந்து சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.


நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவா் நிலைதடுமாறி கீழே விழுந்ததில், படுகாயமடைந்து சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.
நாமக்கல் அருகே உள்ள போதுபட்டி காலனியைச் சோ்ந்த பிரகாஷ் (30), வண்ணம் பூசும் வேலை பாா்த்து வந்தாா். இவா் கடந்த 16-ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் போதுப்பட்டியில் இருந்து வேலகவுண்டம்பட்டி நோக்கி சென்றுள்ளாா். வேலகவுண்டம்பட்டியை அடுத்த இளநகா் அருகே சென்ற போது திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்தாா். இதில் படுகாயமடைந்த பிரகாஷை அவ்வழியாகச் சென்றவா்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரகாஷ், புதன்கிழமை இரவு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து வேலகவுண்டம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...