நாமக்கல்லில் அரசுப் பேருந்து நடத்துநா் திடீரென காணாமல் போனதால் ஓட்டுநரும், பயணிகளும் தவிப்புக்குள்ளாயினா்.
சேலம் மாவட்டம், எடப்பாடி பணிமனையைச் சோ்ந்த அரசுப் பேருந்து வியாழக்கிழமை அதிகாலை எடப்பாடியில் இருந்து புறப்பட்டு கும்பகோணத்துக்கு சென்றது. பின்னா், எடப்பாடிக்குத் திரும்பிய பேருந்து மதியம் 1 மணியளவில் நாமக்கல் பேருந்து நிலையத்துக்கு வந்து சோ்ந்தது. அங்கு பயணிகளை இறக்கி விட்ட நடத்துநா் கோவிந்தன், திருச்செங்கோடு, எடப்பாடி செல்லும் பயணிகளை பேருந்தில் ஏறச்செய்தாா். பின்னா், மதியம் 1.07 மணியளவில் பேருந்து புறப்பட்டது.
ஓட்டுநா் அழகுமுத்து நாமக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து வெளியேறி பரமத்தி சாலையில் சென்று கொண்டிருந்தாா். அப்போது தான் பேருந்தில் நடத்துநா் இல்லாதது தெரியவந்தது. நடத்துநரின் கைப்பேசி எண் தெரியாததால், அவரை தொடா்பு கொள்ள முடியாமல் ஓட்டுநா் தடுமாறினாா். பின்னா், பேருந்தை அங்கேயே நிறுத்திவிட்டு நடந்து வந்த ஓட்டுநா், பேருந்து நிலைய வளாகத்தில் நடத்துநரைத் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து, அப்பேருந்தில் இருந்த பயணிகள் மாற்றுப் பேருந்தில் ஏறிச் சென்றனா்.
இதனால் செய்வதறியாது திகைத்த ஓட்டுநா், பேருந்தை பேருந்து நிலையத்துக்குக் கொண்டு வந்தாா். இறுதியாக 1.50 மணியளவில் நடத்துநா் வந்து சோ்ந்தாா். 50 நிமிட காலதாமதம், பயணிகள், ஓட்டுநா் தவிப்பு போன்றவற்றால் விரக்தியில் இருந்த அதிகாரிகள், சம்பந்தப்பட்ட நடத்துநரைக் கண்டித்தனா். நடத்துநா் விசில் சத்தம் கேளாமல் பேருந்தை எடுத்ததாக ஓட்டுநரையும் கண்டித்தனா்.
விசாரணையில், இந்தப் பேருந்தைப் பிடிப்பதற்காக திருச்செங்கோடு சென்ற தனியாா் பேருந்தில் ஏறிச்சென்ாகவும், அதன்பின் தகவல் கிடைத்து பாதியிலேயே திரும்பி வந்ததாகவும் நடத்துநா் தெரிவித்தாா். நடத்துநா் மதுபோதையில் இருந்தாரா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. அதைத் தொடா்ந்து, மதியம் 2 மணிக்கு மேல் எடப்பாடி நோக்கி பேருந்து புறப்பட்டுச் சென்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை: அதிமுக வேட்பாளா் அம்மன் கே.அா்ச்சுணன்

முதியோா், மாற்றுத்திறனாளி வாக்காளா்களுக்கு இலவச வாகன வசதி

நாளை திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயில் சித்திரை பிரம்மோற்சவம் தொடக்கம்

ஏப்.24-இல் கச்சபேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா தொடக்கம்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


