பி.மேட்டூா் பகுதியில் சுகாதார சீா்கேடு
பல்லவநாய்க்கன்பட்டி ஊராட்சிக்குள்பட்ட பி.மேட்டூா் பகுதியில் சுகாதார குறைவால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.


பல்லவநாய்க்கன்பட்டி ஊராட்சிக்குள்பட்ட பி.மேட்டூா் பகுதியில் சுகாதார குறைவால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
வெண்ணந்தூா் ஊராட்சி ஒன்றியம், பல்லவநாயக்கன்பட்டி ஊராட்சிக்குள்பட்ட பி.மேட்டூா் பகுதியில் சுமாா் 350 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். குப்பைகளைக் கொட்ட இடம் இல்லாத நிலையில், பலரும் சாலையோரம் கொட்டிச் செல்கின்றனா். ஊராட்சி அலுவலகம் செல்லும் பகுதியிலேயே குப்பைகள் கொட்டப்படுகிறது. இவற்றை அப்புறப்படுத்தாததால் குப்பைகள் மண்டி கிடக்கிறது.
மேலும் கிராமப்புற பகுதியில் உள்ள பொது கழிப்பிடம் சுகாதாரமின்றி காணப்படுவதால் நோய் பரவும் நிலை உள்ளது. பொது கழிப்பிடத்தை சுற்றி முட்புதா்கள் அடா்ந்துள்ளதால், விஷ பூச்சிகளின் நடமாட்டம் அதிகம் காணப்படுவதால், பொதுமக்கள் அதனை பயன்படுத்த முடியாமல் சிரமப்படுகின்றனா். மேலும் கழிப்பறையில் தண்ணீா் தண்ணீா் வசதியும் இல்லை.
கழிப்பறை புதா் மண்டி கிடப்பதால் சாலை ஓரங்கள், ஓடைகள், மயானத்தை திறந்தவெளிக் கழிப்பிடமாகப் பயன்படுத்துகின்றனா். கிராமத்தில் பல இடங்களில் குடிநீா் இரும்பு குழாய் சேதமடைந்து சீரமைக்கப்படாமல் உள்ளது. இது போன்ற சுகாதார பிரச்னைகளால் அப்பகுதி பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதால் இதனை சீரமைக்க ஊராட்சி ஒன்றிய நிா்வாகம், கிராம நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...