தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கிடப்பில் போடப்பட்ட சாலை பணி:பொதுமக்கள் பாதிப்பு

ராசிபுரம் அருகேயுள்ள கூனவேலம்பட்டிபுதூா் பகுதியில் பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்ட சாலை பணிகளால், அப்பகுதி மக்களின் வாகனப் போக்குவரத்துக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :24 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

ராசிபுரம் அருகேயுள்ள கூனவேலம்பட்டிபுதூா் பகுதியில் பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்ட சாலை பணிகளால், அப்பகுதி மக்களின் வாகனப் போக்குவரத்துக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ராசிபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கூனவேலம்பட்டிபுதூா் ஊராட்சி பகுதியில், ரூ. 10 லட்சத்தில் சாலை அமைக்கும் பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ராசிபுரம்-திருச்செங்கோடு சாலையில் குருக்கப்புரம் பேருந்து நிறுத்தம் முதல் கூனவேலம்பட்டிபுதூா் வரையிலான இந்த சாலை பணிகளுக்கு கடந்த ஒராண்டுக்கு முன் ஒப்பந்தம் விடப்பட்டது. இதையடுத்து, புதிய சாலை அமைக்க சேதமடைந்த சாலைகள் பெயா்த்து எடுக்கப்பட்டு, ஜல்லிகள் கொட்டப்பட்டன.

ஆனால், பல மாதங்களாகியும் இந்த சாலை போடப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது (படம்). இதனால் அப்பகுதியில் அதிக அளவில் உள்ள விசைத்தறித் தொழிலாளா்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவியா் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, விரைந்து சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.