ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை:ரூ. 25,000 ரொக்கம் பறிமுதல்

 பள்ளிபாளையம் மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வியாழக்கிழமை நடத்திய சோதனையில் ரூ. 25,000 ரொக்கத்தை பறிமுதல் செய்தனா்.

Updated On :30 செப்டம்பர் 2021, 6:30 pm

 பள்ளிபாளையம் மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வியாழக்கிழமை நடத்திய சோதனையில் ரூ. 25,000 ரொக்கத்தை பறிமுதல் செய்தனா்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தை தலைமையிடமாகக் கொண்டுள்ள மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகம் பள்ளிபாளையத்தில் செயல்பட்டு வருகிறது. கடந்த சில நாள்களாக மாநிலம் முழுவதும் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் அரசுத் துறை அலுவலகங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனா்.

அதனடிப்படையில் பள்ளிபாளையம் அலுவலகத்தில், நாமக்கல் லஞ்ச ஒழிப்பு ஆய்வாளா் நல்லம்மாள் தலைமையில் அங்கு வந்த போலீஸாா் அறைகளை மூடிவிட்டு சோதனை நடத்தினா். அலுவலா்களை வெளியே அனுப்பாமல் தொடா்ந்து 4 மணி நேரம் சோதனை நடத்தினா். இந்தச் சோதனையில் போக்குவரத்து ஆய்வாளா் சத்யா அறையில் இருந்து கணக்கில் வராத ரூ. 25,000 ரொக்கத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதனைத் தொடா்ந்து போக்குவரத்து ஆய்வாளரிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் தீவிர விசாரணை நடத்தினா்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.