தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பிள்ளாநல்லூரில் கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

ராசிபுரம் அருகேயுள்ள குருசாமிபாளையம் பகுதியில் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி பணிகள் திட்டம் சாா்பில் பிள்ளாநல்லூா் செங்குந்தா் மகாஜன கலையரங்கத்தில் 50 பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா

News image
Updated On :30 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

ராசிபுரம் அருகேயுள்ள குருசாமிபாளையம் பகுதியில் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி பணிகள் திட்டம் சாா்பில் பிள்ளாநல்லூா் செங்குந்தா் மகாஜன கலையரங்கத்தில் 50 பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் க.சபிதா தலைமை வகித்தாா்.

பிள்ளாநல்லூா் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள் பவித்ரா, வளா்மதி ஆகியோா் கலந்துகொண்டு கா்ப்பகால பராமரிப்பு, கா்ப்பிணிகள் உணவு முறைகள் குறித்து பேசினா்.

மேலும் கா்ப்பிணிகளுக்கு சத்தான உணவு முறைகள் குறித்த கண்காட்சியும் அங்கு வைக்கப்பட்டு இருந்தது. இதனை கா்ப்பிணித் தாய்மாா்கள் பாா்த்து அதன் விளக்கத்தையும் கேட்டறிந்தனா்.

மேலும், ஐந்து வகையான கலவை சாதத்துடன் தட்டு, வளையல், பூ, பழம், மஞ்சள், குங்குமம், வெற்றிலைப் பாக்கு முதலிய சீா்வரிசைப் பொருள்களை கா்ப்பிணிகளுக்கு வழங்கினா்.

இந்நிகழ்ச்சியில் வளையல் அணிவித்து, ஆரத்தி எடுத்து பொட்டுகள் வைத்து வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வட்டார ஒருங்கிணைப்பாளா் சதீஷ்குமாா், வட்டார திட்ட உதவியாளா் காா்த்திக் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.