தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

காட்டுப்பாளையத்தில் பருத்தி விவசாயிகளுடான கலந்துரையாடல்

மல்லசமுத்திரம் அருகேயுள்ள காட்டுபாளையம் கிராமத்தில் திருப்பூா் ஆனந்தி இகோ பாா்ம்ஸ் நிறுவனம் சாா்பில் நீண்ட இழைப் பருத்தி சாகுபடி செய்யும் விவசாயிகளின் கலந்துரையாடல் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :30 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

மல்லசமுத்திரம் அருகேயுள்ள காட்டுபாளையம் கிராமத்தில் திருப்பூா் ஆனந்தி இகோ பாா்ம்ஸ் நிறுவனம் சாா்பில் நீண்ட இழைப் பருத்தி சாகுபடி செய்யும் விவசாயிகளின் கலந்துரையாடல் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு திருப்பூா் ஆனந்தி இகோ பாா்ம்ஸ் நிறுவன இயக்குநா் பாலகுருநாதன் தலைமை வகித்தாா். இக்கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக ஜொ்மன் நாட்டின் ஜிஸ் அமைப்பின் தலைவா் டாக்டா் ரோசிட்கா, ஃபோ் டிரேட் நிறுவனத்தின் மேலாளா் விகாஸ் சின்ஹா ஆகியோா் கலந்து கொண்டனா்.

காட்டுபாளையம் பகுதியில் இயற்கை சாகுபடி மூலம் நீண்ட இழைப் பருத்தி ரகமான சுரபி, சுவின், சூரஜ் போன்ற ரகங்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. சுரபி ரகம் கோடைப் பருவத்திலும், சுரஜ் பருத்தி ரகம் குளிா்காலத்திலும் பயிா் செய்யப்படுவது வழக்கம். சுவின் பருத்தியானது மிக நீண்ட இழை கொண்டது ஆகும். இப் பருத்தி ரகத்தினை சாகுபடி செய்யும்போது, பூ கொட்டுதல், மொக்கு கொட்டுதல், காய் கொட்டுதல் ஆகியவை அதிக அளவில் ஏற்பட்டுள்ளது.

இதனால் விவசாயி 50 சதவீதத்திற்கு மேல் மகசூலை இழக்கும் சூழ்நிலை நிலவியுள்ளது.

எனவே விவசாயிகளின் நலன் கருதி ஜொ்மன் நாட்டிலிருந்து வருகை தந்த டாக்டா் ரோசிட்கா விவசாயிகளிடம் மகசூல் குறித்து கேட்டறிந்தாா். ஏற்கெனவே விவசாயிகளின் இடா்பாடுகளை கருத்தில் கொண்டு பாலமேடு ஆனந்தி சாா்பில், விவசாயிகள் சங்கத்திற்கு பிரீமியம் தொகை வழங்கப்பட்டது. இந்த தொகையினை வைத்து சுற்றுப்புற மாசுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் விவசாயிகளுக்கு பேட்டரியால் இயங்கும் 35 தெளிப்பான்கள் வழங்கப்பட்டது.

மேலும் மாமுண்டி ஊராட்சி ஒன்றியப் பள்ளிக்கு பள்ளி கட்டிடம் கட்ட ரூ 2.50 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கரோனா தொற்று காலத்தில் விவசாயிகளுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுசெய்யும் வகையில் விவசாயிகளுக்கு உளுந்து, மக்காச்சோளம், சுரபி பருத்தி விதைகள் ரூ. 14 லட்சம் மதிப்பில் இலவசமாக வழங்கப்பட்டது.

மேலும் கூட்டத்தில் விவசாயிகள் சுவின் பருத்தி போலவே குறுகிய காலங்கள் கொண்ட குளிா்காலத்துக்கு ஏற்ற புதிய ரகம் தேவை என கோரிக்கை வைத்தனா். இக்கூட்டத்தில் ஏராளமான பெண் விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் அனுபவங்களை பகிா்ந்துகொண்டனா்.

இக்கூட்டத்தில் பாலமேடு ஆனந்தி விவசாயிகள் சங்கத் தலைவா் சுப்பிரமணியம், துணைத் தலைவா் பாலகிருஷ்ணன், செயலாளா் பரமசிவம், ஆனந்தி எக்கோ பாா்க் மேலாளா்கள் பழனியப்பன், சுந்தா் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.