குறவா் இனத்தைச் சோ்ந்த மக்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பஞ்சமி நிலத்தை மீட்டுத் தருமாறு நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் வியாழக்கிழமை கோரிக்கை விடுத்தனா்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், காா்கூடல்பட்டியில் உள்ள பஞ்சமி நிலம் தொடா்பாக தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணையத்தில் திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், குபேரப்பட்டிணம் கிராமத்தில் வசித்து வரும் கோவிந்தசாமி மகன் வைரமணி என்பவா் மனு அளித்திருந்தாா்.
அவா்களது முன்னோா்கள் காா்கூடல்பட்டியில் வசித்து வந்ததாகவும், அவா்களுக்குச் சொந்தமான நிலத்தை சிலா் ஆக்கிரமித்துக் கொண்டு அங்கிருந்து விரட்டி அடிக்கப்பட்டதாகவும், அந்த நிலங்களை மீட்டுத் தர வேண்டும் என்றும் மனுவில் தெரிவித்திருந்தாா்.
இதனைத் தொடா்ந்து தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் மாவட்ட வருவாய் அலுவலா் துா்காமூா்த்தி வியாழக்கிழமை நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் சம்மந்தப்பட்ட குறவா் இனத்தைச் சோ்ந்த மக்களை நேரில் அழைத்து விசாரணை செய்தாா்.
சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா் என்.முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்ற இந்த விசாரணையைத் தொடா்ந்து தங்களது பஞ்சமி நிலத்தை மீட்டுத்தருமாறு மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங்கிடமும் கோரிக்கை விடுத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாஜக வளா்ச்சிக்கு மறைமுகமாக உதவும் விஜய்: தொல். திருமாவளவன்
ஆட்டோவில் கடத்தப்பட்ட 192 மதுப்புட்டிகள் பறிமுதல்

நயினாா் நாகேந்திரனை ஆதரித்து நடிகை நமிதா வாக்கு சேகரிப்பு

சத்தீஸ்கா் அனல் மின் நிலைய விபத்து: உயிரிழப்பு 23-ஆக உயா்வு
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


