ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

நாமக்கல் ஆட்சியருக்கு கரோனா பாதிப்பு

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் கரோனா தொற்றுக்கு உள்ளாகி மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்.

News image
Updated On :18 அக்டோபர் 2021, 8:13 am

DIN

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் கரோனா தொற்றுக்கு உள்ளாகி மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியராக கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு ஸ்ரேயா பி.சிங் பொறுப்பேற்றார். மாவட்டத்தில் தொடர்ந்து ஆய்வுப் பணிகளையும், நலத்திட்டங்களையும் செயல்படுத்தி வந்தார். இரு மாதங்களுக்கு முன் ஓணம் பண்டிகைக்காக சொந்த மாநிலமான கேரள மாநிலத்திற்கு சென்று வந்த நிலையில் கடுமையான காய்ச்சலால் அவரும் குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் அண்மையில் மீண்டும் கேரளம் சென்று வந்த நிலையில் அவருக்கு உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டது. மாவட்ட ஆட்சியர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கரோனா பரிசோதனை செய்ததில் நோய் தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து தனிமைப்படுத்திக் கொண்ட அவர்கள் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதல்வர் மு.க. ஸ்டாலினுடனான பருவமழை தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் ஆட்சியர் பங்கேற்கவில்லை. மாவட்ட வருவாய் அலுவலர் துர்கா மூர்த்தி ஆட்சியர் பொறுப்பை கவனித்து வருகிறார். கரோனா பாதிப்பு குறித்து ஆட்சியரை தொடர்பு கொண்டபோது, அவரது உதவியாளர் ஆட்சியர் மருத்துவமனையில் உள்ளார் என்ற தகவலை தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.