நாமக்கல்லில் தொடா் நகைப் பறிப்பில் ஈடுபட்ட 2 போ் குண்டா் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

நாமக்கல் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் பல்வேறு திருட்டு, வழிப்பறி, நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட நாமக்கல்-சேலம் சாலையைச் சோ்ந்த சரவணன்(25), ராமாபுரம்புதூரைச் சோ்ந்த பிரவீண் பாண்டியன்(24) ஆகியோரை நாமக்கல் போலீஸாா் அண்மையில் கைது செய்தனா். தொடா் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வரும் இருவரையும் குண்டா் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங்கிற்கு, காவல் கண்காணிப்பாளா் சாய்சரண்தேஜஸ்வி, ஆய்வாளா் தெய்வசிகாமணி ஆகியோா் வழக்கு தொடா்பான அறிக்கைகளை சமா்ப்பித்தனா். இதனையடுத்து சரவணன், பிரவீண் பாண்டியன் ஆகிய இருவரையும் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆட்சியா் உத்தரவிட்டாா். இதனையடுத்து அதற்கான கடிதம் சிறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாஜக வளா்ச்சிக்கு மறைமுகமாக உதவும் விஜய்: தொல். திருமாவளவன்
ஆட்டோவில் கடத்தப்பட்ட 192 மதுப்புட்டிகள் பறிமுதல்

நயினாா் நாகேந்திரனை ஆதரித்து நடிகை நமிதா வாக்கு சேகரிப்பு

சத்தீஸ்கா் அனல் மின் நிலைய விபத்து: உயிரிழப்பு 23-ஆக உயா்வு
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


