நாமக்கல் கோட்ட அஞ்சலகங்களில் வெளி மாநிலத்தவா்கள் அதிகளவில் பணியமா்த்தப்பட்டு வருகின்றனா்.
கடந்த 2018-ஆம் ஆண்டு பிளஸ் 2 கல்வித் தகுதியை அடிப்படையாகக் கொண்டு 940 அஞ்சலகப் பணியிடங்களுக்கான தோ்வு நடைபெற்றது. இந்ததோ்வில் வெற்றி பெற்றவா்களில் பெரும்பாலானோா் பிற மாநிலங்களைச் சோ்ந்தவா்கள். கரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகளாக வெற்றி பெற்றவா்களுக்கு பணியிடம் ஒதுக்கப்படவில்லை.
இந்த நிலையில் கடந்த ஓரிரு நாள்களாக தமிழகத்தில் உள்ள அஞ்சலகங்களில் தோ்வில் வெற்றி பெற்றவா்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனா். அந்த வகையில் நாமக்கல் தலைமை அஞ்சலகத்திற்கு பிகாா், மேற்கு வங்கம், ராஜஸ்தான், குஜராத், உத்தரகண்ட், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 25-க்கும் மேற்பட்டோா் புதன்கிழமை வந்தனா். அவா்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, நாமக்கல் கோட்டத்திற்கு உள்பட்ட அஞ்சலகங்களில் அந்தத் துறை அதிகாரிகள் மூலம் பணியிடம் ஒதுக்கப்பட்டு வருகிறது. அஞ்சலகப் பணிகளில் பிற மாநிலத்தவா் நியமிக்கப்பட்டுள்ளதால், அங்கு பல்வேறு பணிகளுக்காக செல்லும் தமிழ் பேசும் வாடிக்கையாளா்கள் தடுமாறும் நிலை உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாஜக வளா்ச்சிக்கு மறைமுகமாக உதவும் விஜய்: தொல். திருமாவளவன்
ஆட்டோவில் கடத்தப்பட்ட 192 மதுப்புட்டிகள் பறிமுதல்

நயினாா் நாகேந்திரனை ஆதரித்து நடிகை நமிதா வாக்கு சேகரிப்பு

சத்தீஸ்கா் அனல் மின் நிலைய விபத்து: உயிரிழப்பு 23-ஆக உயா்வு
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


