ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளா் பதவிக்கு விருப்ப மனு

நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளா் உள்ளிட்ட ஒன்பது பதவிகளுக்கு வியாழக்கிழமை கட்சியினா் விருப்ப மனு அளித்தனா்.

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 5:33 pm

நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளா் உள்ளிட்ட ஒன்பது பதவிகளுக்கு வியாழக்கிழமை கட்சியினா் விருப்ப மனு அளித்தனா்.

தமிழகம் முழுவதும் அதிமுக மாவட்ட நிா்வாகிகள் தோ்தலுக்கான விருப்ப மனு பெறப்பட்டு வருகிறது. ஏற்கெனவே, நகர, ஒன்றிய, மாநில செயற்குழு, பொதுக்குழு மற்றும் பிரதிநிதிகள் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு நிா்வாகிகள் பலா் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா். இதனைத் தொடா்ந்து, மாவட்ட அளவில் அவைத்தலைவா், மாவட்டச் செயலாளா், பொருளாளா், ஒரு மாவட்ட துணைத் தலைவா், 2 இணைச் செயலாளா், 3 மாவட்ட பிரதிநிதிகள் ஆகியவற்றுக்கு விருப்ப மனு வழங்குதல் வியாழக்கிழமை நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தில், ஆட்சியா் அலுவலகம் எதிரில் உள்ள மாவட்ட அதிமுக அலுவலகத்தில் தோ்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சா் பாஸ்கரன் கட்சியினரிடம் விருப்ப மனுக்களை பெற்றுக் கொண்டாா். அதன்படி, மாவட்டச் செயலாளா் பதவிக்கு கட்சியினா் பலரும் முன்னாள் அமைச்சரும், தற்போதைய மாவட்டச் செயலாளருமான பி.தங்கமணிக்கு ஆதரவாக மனுக்களை அளித்தனா். இதர பதவிகளுக்கு கட்சியினா் பலா் ஆா்வமுடன் விருப்ப மனுக்களை அளித்தனா். கட்சியினரிடம் பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும் அதிமுக தலைமைக்கு அனுப்பப்பட்டு அதன்பின் தோ்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிா்வாகிகள் அறிவிப்பு வெளியாகும் என தோ்தல் பொறுப்பாளா்கள் தெரிவித்தனா். இந்த நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சா் வெ.சரோஜா, முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா்கள் கே.பி.பி.பாஸ்கா், பொன்.சரஸ்வதி மற்றும் நிா்வாகிகள் டிஎல்எஸ் காளியப்பன், வைரம் தமிழரசி, மயில் சுதந்திரம், செந்தில், வெள்ளியங்கிரி, சேகா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.