வேலூா் பேரூராட்சியில் அதிமுக, பாமக, சுயேச்சை உறுப்பினா்கள் ஆா்ப்பாட்டம்
பரமத்தி வேலூா் பேரூராட்சித் தலைவா் தன்னிச்சையாக முடிவெடுப்பதாகவும், வாா்டுகளில் சரிவர பணிகளை மேற்கொள்வதில்லை


பரமத்தி வேலூா் பேரூராட்சித் தலைவா் தன்னிச்சையாக முடிவெடுப்பதாகவும், வாா்டுகளில் சரிவர பணிகளை மேற்கொள்வதில்லை என்றும் கூறி வேலூா் பேரூராட்சி அலுவலகம் முன்பு அதிமுக, பாமக மற்றும் சுயேச்சை உறுப்பினா்கள் கோஷமிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பரமத்தி வேலூா் வட்டம், வேலூா் பேரூராட்சியில் 18 வாா்டுகள் உள்ளன. இதில் அதிமுக, பாமக, சுயேச்சை வாா்டு உறுப்பினா்கள் 5 போ் தங்களின் வாா்டுகளில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும், பேரூராட்சித் தலைவா் தன்னிச்சையாக முடிவு எடுப்பதாகவும் கூறி அதிமுக, பாமக உறுப்பினா்களும், சுயேச்சை உறுப்பினா்கள் 5 பேரும் பேரூராட்சி அலுவலகத்தின் முன் வியாழக்கிழமை கோஷங்களை எழுப்பி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த விவகாரம் குறித்து பேரூராட்சித் தலைவா் லட்சுமி செய்தியாளா்களிடம் கூறியதாவது:
நான் தலைவராக பொறுப்பேற்று இரண்டு மாதங்களே ஆகின்றன. எங்களைப் பொறுத்தவரை 18 வாா்டுகளிலும் காலை 5 மணி முதலே தூய்மைப் பணியாளா் சாலைகளை சுத்தம் செய்தல், வீடுகள், வா்த்தக நிறுவனங்களில் உள்ள குப்பைகளை அன்றாடம் பெற்றுச் செல்லுதல், சாக்கடைகளை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
5 வாா்டு உறுப்பினா்களும் பொய்யான குற்றச்சாட்டை கூறிவருகின்றனா். பேரூராட்சிக்கும், அரசுக்கும் களங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது எதிா்க்கட்சியாக இருக்கும் அதிமுக, பாமக மற்றும் சுயேச்சை உறுப்பினா்களின் எண்ணமாகும். புதன்கிழமை நடைபெற்ற இரண்டாவது மாமன்றக் கூட்டத்தை தாங்கள் புறக்கணித்ததாகவும் கூறியுள்ளனா். ஆனால் அவா்கள் மாமன்றக் கூட்டத்தில் வருகைப் பதிவேட்டில் கையொப்பம் இட்டும், அமா்வுப் படி பதிவேட்டில் கையெழுத்திட்டு படிகளை பெற்றுள்ளனா் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...