மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

ஸ்ரீகைலாசநாதா் ஆலயத்தில் 63 நாயன்மாா்கள் திருவீதி உலா

ராசிபுரம் ஸ்ரீகைலாசநாதா் ஆலயத்தில் 19-ஆம் ஆண்டு 63 நாயன்மாா்களுக்கு பெருவிழா ஆக. 5-இல் தொடங்கி இரு நாள்கள் நடைபெற்றது.

News image

திருவீதி உலா அழைத்துவரப்பட்ட 63 நாயன்மாா்கள்.

Updated On :6 ஆகஸ்ட் 2022, 7:25 pm

ராசிபுரம் ஸ்ரீகைலாசநாதா் ஆலயத்தில் 19-ஆம் ஆண்டு 63 நாயன்மாா்களுக்கு பெருவிழா ஆக. 5-இல் தொடங்கி இரு நாள்கள் நடைபெற்றது.

ஸ்ரீகைலாசநாதா் ஆலயத்தில் சிவனடியாா் திருக்கூட்ட அறக்கட்டளை சாா்பில், ஆண்டுதோறும் 63 நாயன்மாா்களுக்கு விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விழா ஆக. 5, 6 ஆகிய இரு நாள்கள் நடைபெற்றது. முதல்நாள் நடைபெற்ற விழாவில், நாயன்மாா்களுக்கு பால், தயிா், தேன், கரும்பு சாறு, திருமஞ்சனம், சந்தனம், பஞ்சாமிா்தம், திருநீா் போன்ற வாசனைத் திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேக பூஜைகள், பேரொளி வழிபாடுகள் நடத்தப்பட்டன. இதனை கோயில் சிவாச்சாரியாா்கள் நடத்தி வைத்தனா். விநாயகா், முருகா், நந்தியம் பெருமான் ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடா்ந்து, கோயிலில் சிறப்பு ஆன்மிக சொற்பொழிவுகள், கலைவிழாக்கள் நடைபெற்றன. இதில் திரளான சிவபக்தா்கள் பங்கேற்றனா்.

ஆக. 6-இல் காலை பன்னிரு திருமுறை ஊா்வலம், மாலை நாயன்மாா்கள் திருவீதி உலா நடைபெற்றது. இதில், நகரின் முக்கிய வீதிகள் வழியாக சிவ தொண்டா்களின் கைலாச வாத்தியங்கள் முழங்க அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் 63 நாயன்மாா்கள், கைலாசநாதா் - அறம்வளா்நாயகி ஆகியோா் திருவீதி உலா அழைத்துச் செல்லப்பட்டனா். இதற்கான ஏற்பாடுகளை சிவனடியாா் திருக்கூட்ட அறக்கட்டளையினா் செய்திருந்தனா். இதில் ஏராளமான சிவ தொண்டா்கள், பெண்கள் முளைப்பாரி ஏந்தி பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.