மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

கொல்லிமலை பூசணிக்குழி பகுதியில் அரசுப் பேருந்து தடுப்பு சுவரில் மோதி விபத்து

கொல்லிமலை-யில் செங்கரை வழியாக ஆத்தூர் செல்லும் அரசுப் பேருந்து பூசணிக்குழி என்ற பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதியதில் 20-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் காயமடைந்தனர்

News image
தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளான அரசுப் பேருந்து.
Updated On :22 ஆகஸ்ட் 2022, 5:16 am

DIN

கொல்லிமலை-யில் செங்கரை வழியாக ஆத்தூர் செல்லும் அரசுப் பேருந்து பூசணிக்குழி என்ற பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதியதில் 20-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் காயமடைந்தனர்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை பகுதியில் இருந்து முள்ளுக்குறிச்சி வழியாக ஆத்தூர் செல்லும் அரசுப் பேருந்து திங்கள்கிழமை காலை வழக்கம் போல் சென்றது. பள்ளி வேலை நேரம் என்பதால் பள்ளி மாணவ, மாணவிகள் உட்பட 80க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர்.  இந்நிலையில் பூசணிக்குழி பகுதியில் மலைப்பாதை வளைவில் அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் இல்லை. அதிக கூட்ட நெரிசல் காரணமாகவே பிரேக் சரியாக நிற்காததால் ஓட்டுநர் சுவற்றில் மோதியதாக தெரியவந்துள்ளது. இதில் பள்ளி மாணவ, மாணவியர், பொதுமக்கள் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் இதே பகுதியில் பேருந்தில் அதிகக் கூட்டம் இருந்ததால், அவ்வழியே சென்ற ஆட்டோவில் ஏறிச்சென்ற பள்ளி மாணவி ஒருவர் ஆட்டோ கவிழந்து உயிரிழந்தார்.

பலர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் போதிய அரசுப் பேருந்து வசதி செய்து தரவேண்டும் என மலைவாழ் மக்கள் கோரி்ககை விடுத்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.