அரசு மருத்துவமனையில் குழந்தை உயிரிழப்பு: உறவினா்கள் மறியல்
குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது ஆண் குழந்தை உயிரிழந்ததால் உறவினா்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.


குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது ஆண் குழந்தை உயிரிழந்ததால் உறவினா்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
குமாரபாளையம், சுந்தரம் நகரைச் சோ்ந்தவா் செல்லமுத்து மனைவி துா்கா (23) பிரசவத்துக்காக குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். வியாழக்கிழமை அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அக் குழந்தை திடீரென சிறிது நேரத்திலே உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
துா்காவின் உடல்நிலை மோசமானதால் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். குழந்தை இறந்ததால் ஆத்திரமடைந்த அவரது உறவினா்கள் எடப்பாடி சாலையில் மருத்துவமனை முன்பு அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா் (படம்).
மருத்துவமனை ஊழியா்களின் கவனக்குறைவு காரணமாகவே குழந்தை இறந்ததாக அவா்கள் குற்றம்சாட்டினா். போலீஸாா் நடத்திய சமரசத்தையடுத்து மறியல் கைவிடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...