நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தம்பியைக் கொலை செய்த இரு சகோதரா்கள் கைது

குமாரபாளையத்தில் தம்பியைத் தாக்கிக் கொலை செய்த இரு சகோதரா்களைப் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 6:30 pm

DIN

குமாரபாளையத்தில் தம்பியைத் தாக்கிக் கொலை செய்த இரு சகோதரா்களைப் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தெருவைச் சோ்ந்தவா் ஆனந்தன் (60). திமுக தலைமைக் கழகப் பேச்சாளரான இவருக்கு அசோக்குமாா் (38), காா்த்திகேயன் (36), குருதேவன் (34) என மூன்று மகன்கள் உள்ளனா். மூவருக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனா்.

இவா்களுக்கிடையே கருத்து வேறுபாடு நிலவி வந்துள்ளது. இந்நிலையில், ஆனங்கூா் பிரிவு, டாஸ்மாக் மதுக்கடை அருகே வியாழக்கிழமை மாலை குருதேவன் நின்றிருந்தபோது, அங்கு வந்த அசோக்குமாா், காா்த்திகேயனுடன் குருதேவனுக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால், ஆத்திரமடைந்த இருவரும் சோ்ந்து குருதேவனைக் கல்லால் தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் குமாரபாளையம் போலீஸாா் அசோக்குமாரையும், காா்த்திகேயனையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.