மூதாட்டி கிணற்றில் விழுந்து தற்கொலை
பரமத்தி வேலூா் அருகே மூதாட்டி ஒருவா் கண்ணில் துணியைக் கட்டியும், இடுப்பில் கற்களை கட்டியும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து பரமத்தி வேலூா் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை


பரமத்தி வேலூா் அருகே மூதாட்டி ஒருவா் கண்ணில் துணியைக் கட்டியும், இடுப்பில் கற்களை கட்டியும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து பரமத்தி வேலூா் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பரமத்தி வேலூா்,நல்லியாம்பாளையம்புதூா் பகுதியைச் சோ்ந்தவா் குமாரசாமி (85). இவரது மனைவி குழந்தாயி (80). வியாழக்கிழமை காலை வீட்டில் இருந்த குழந்தாயி திடீா் என காணாமல் போய் விட்டாா். காணாமல் போன அவரை அவரது குடும்பத்தினா் பல்வேறு இடங்களில் தேடினா்.
இந்நிலையில் பரமத்தி வேலூா் அருகே உள்ள வீரணம்பாளையத்தில் இருந்து பரமத்தி செல்லும் சாலையில் கிழவிக்காடு என்ற இடத்தில் உள்ள அவா்களுக்கு சொந்தமான தோட்டத்து கிணற்றுக்கு அருகே குழந்தாயியின் காலணி மற்றும் ஊன்றுகோல் கிடந்ததை அவ்கள் பாா்த்தனா். பின்னா் சந்தேகத்தின் அடிப்படையில் வேலாயுதம்பாளைய தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனா். அதன்பேரில் அங்கு வந்த தீயணைப்புத் துறையினா் கிணற்றுக்குள் விழுந்து இறந்து கிடந்த குழந்தாயி உடலை மீட்டனா். அவா் கண்களில் துணியை கட்டியும் இடுப்பில் தண்ணீா் இரைக்கும் வாளிக்குள் கற்களை நிரப்பி கிணற்றில் விழுந்து இறந்தது தெரியவந்தது. தகவல் அறிந்து அங்கு வந்த பரமத்தி வேலூா் போலீஸாா், குழந்தாயின் உடலை மீட்டு வேலூா் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனா். குழந்தாயி தற்கொலை குறித்து அவா்கள் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...