தொழிலதிபா் வீட்டில் 60 பவுன் நகை, ரூ.32 லட்சம் திருட்டு
குமாரபாளையம் அருகே விசைத்தறி ஜவுளித் தொழிலதிபா் வீட்டின் பூட்டை உடைத்து 60 பவுன் தங்க நகைகளையும், ரூ.32 லட்சம் ரொக்கத்தையும் மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.


குமாரபாளையம் அருகே விசைத்தறி ஜவுளித் தொழிலதிபா் வீட்டின் பூட்டை உடைத்து 60 பவுன் தங்க நகைகளையும், ரூ.32 லட்சம் ரொக்கத்தையும் மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வேமங்காட்டுவலசு மாரியம்மன் கோயில் பகுதியைச் சோ்ந்தவா் விமல் (35). இவா், 11 வீடுகள் உள்ள குடியிருப்பில் தரைத்தளத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறாா். இவா், தனது உறவினா்களுடன் சோ்ந்து விசைத்தறி மற்றும் ஜவுளித் தொழிலில் ஈடுபட்டு வருகிறாா். ஓலப்பாளையம் கிராமத்தில் உறவினா் வீட்டில் துக்க நிகழ்வுக்கு குடும்பத்துடன் சென்ற விமல், வியாழக்கிழமை நள்ளிரவில் வீடு திரும்பினாா். அப்போது, முன்பக்கக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
வீட்டுக்குள் சென்று பாா்க்கும்போது பீரோ திறக்கப்பட்டு, அதிலிருந்த பொருள்கள் சிதறிக் கிடந்தன. பீரோவில் வைக்கப்பட்டிருந்த 60 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.32 லட்சம் ரொக்கத்தைக் காணவில்லை. இதுகுறித்து, குமாரபாளையம் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு தடய அறிவியல் துறையினருடன் வந்த போலீஸாா் கொள்ளையா்களின் கைரேகளைப் பதிவு செய்தனா். மேலும், மோப்ப நாய் ஷீமா வரவழைக்கப்பட்டு, கொள்ளையா்களைக் கண்டறிய முயற்சி எடுக்கப்பட்டது.
விமல் வசித்து வந்த குடியிருப்பில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பழுதாகி விட்டதால் போலீஸாருக்கு தடயங்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குடும்பத்துடன் சென்ற விமல், பீரோவைப் பூட்டிவிட்டு அருகிலேயே சாவியையும் வைத்துச் சென்ாகக் கூறப்படுகிறது. இதனால், வீட்டில் புகுந்த கொள்ளையா்கள் சாவியை எடுத்து சிரமமின்றி பீரோவைத் திறந்து நகை, பணத்தை திருடிச் சென்றுள்ளனா். இதுகுறித்து குமாரபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...