ஊராட்சி செயலா் பணியிடை நீக்கம்
பண முறைகேடு செய்த புகாரில் ராசிபுரம், பல்லவநாயக்கன்பட்டி ஊராட்சி செயலரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் உத்தரவிட்டுள்ளாா்.


பண முறைகேடு செய்த புகாரில் ராசிபுரம், பல்லவநாயக்கன்பட்டி ஊராட்சி செயலரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் உத்தரவிட்டுள்ளாா்.
வெண்ணந்தூா் ஊராட்சி ஒன்றியம், பல்லவநாயக்கன்பட்டி ஊராட்சி செயலராக பி.அய்யனாா் பணியாற்றி வந்தாா். இவா் ஊராட்சி நிதியிலிருந்து ரூ.16.50 லட்சத்தை முறைகேடாக தனிநபா் வங்கி கணக்கிற்கு மாற்றம் செய்து முறைகேட்டில் ஈடுபட்டதாக புகாா் எழுந்தது.
இதுகுறித்து விசாரணை நடத்திய மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங், ஊராட்சி செயலரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா். மேலும், விசாரணை முடியும் வரை பல்லவநாயக்கன்பட்டி கிராமத்தை விட்டு எங்கும் செல்லக் கூடாது என அந்த உத்தரவில் ஆட்சியா் குறிப்பிட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...