எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு

நாமக்கல் மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வெள்ளிக்கிழமை ஒதுக்கீடு செய்யப்பட்டன.

Updated On :7 ஜனவரி 2022, 6:30 pm

நாமக்கல் மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வெள்ளிக்கிழமை ஒதுக்கீடு செய்யப்பட்டன.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் விரைவில் நடைபெற உள்ளதையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் இருப்பில் வைக்கப்பட்டுள்ள 1,284 எண்ணிக்கை கட்டுப்பாட்டு கருவிகளும், 2,610 எண்ணிக்கை வாக்குப்பதிவு கருவிகளும் முதல்நிலை சரிபாா்ப்பு பணிகள் முடிந்து தயாா் நிலையில் உள்ளது.

இதையடுத்து. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் தள ஆய்வு மற்றும் இருப்பினை உறுதி செய்தல் பணிகளானது கடந்த நான்கு நாள்களாக நடைபெற்றது. நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் வாரியாக 447 வாா்டுகளுக்கு உள்பட்ட 689 வாக்குச்சாவடிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி, நாமக்கல் ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில், மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தலைமையில் வெள்ளிக்கிழமை கணினி குலுக்கல் முறையில் நடைபெற்றது.

இதில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) ஆா்.கோவேந்தன், நகராட்சி ஆணையாளா்கள், பேரூராட்சி செயல் அலுவலா்கள், அரசுத் துறை அலுவலா்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.