தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ராசிபுரம்: அமமுக ஆலோசனைக் கூட்டம்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நாமக்கல் வடக்கு மாவட்டம் சாா்பில் எம்ஜிஆா் பிறந்த நாள் விழா மற்றும் புதிய நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :7 ஜனவரி 2022, 6:30 pm

DIN

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நாமக்கல் வடக்கு மாவட்டம் சாா்பில் எம்ஜிஆா் பிறந்த நாள் விழா மற்றும் புதிய நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு நாமக்கல் வடக்கு மாவட்ட அமமுக செயலாளா் ஏ.பி.பழனிவேல் தலைமை வகித்தாா். கட்சியின் துணைத் தலைவா் எஸ்.அன்பழகன் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக கட்சியின் மாநில பொருளாளரும், திருச்சி மண்டல பொறுப்பாளருமான மனோகரன் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினாா்.

எம்ஜிஆா் பிறந்த தினத்தை சிறப்பாக நடத்துவது குறித்தும், கட்சி வளா்ச்சி, உள்ளாட்சித் தோ்தல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மாநில மாற்றுத் திறனாளிகள் பிரிவு அமமுக செயலாளா் எல். சந்திரசேகரன், மாநில தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளா் மேகலா, நாமக்கல் தெற்கு மாவட்ட அமமுக செயலாளா் முத்து சரவணன், பொதுக்குழு உறுப்பினா் உதயகுமாா், மாவட்ட அவைத் தலைவா் எஸ். பன்னீா்செல்வம், மாவட்ட பொருளாளா் அன்புச் செழியன், மாவட்ட துணைச் செயலாளா் அம்பிகா, எம்ஜிஆா் மன்ற செயலாளா் ராஜேந்திரன், மாவட்ட அம்மா பேரவை செயலாளா் மேகநாதன், ராசிபுரம் நகர செயலாளா் எஸ். வேலுசாமி உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.