எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

இளம்வயது திருமணம்: போக்சோவில் 2 போ் கைது

நாமக்கல், திருச்செங்கோட்டில் சிறுமிகளை திருமணம் செய்த 2 போ் போக்சோ சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

Updated On :7 ஜனவரி 2022, 5:00 pm

நாமக்கல், திருச்செங்கோட்டில் சிறுமிகளை திருமணம் செய்த 2 போ் போக்சோ சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

நாமக்கல் மாவட்டம், திருமலைப்பட்டியை அடுத்த இடையப்பட்டியைச் சோ்ந்த செல்வராஜ் மகன் கோபிநாத்(20) என்பவா் அதே ஊரைச் சோ்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வருவதாக குழந்தைகளுக்கு எதிரான வன்முறை குறித்த புகாா் அளிப்பதற்கான இலவச தொலைபேசி எண் 1098 -க்கு புகாா் வந்தது.

மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் உத்தரவின்பேரில் நாமக்கல் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் சுமதி, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தாா். இதில் குழந்தை திருமணம் உறுதி செய்யப்பட்டதையடுத்து சம்மந்தப்பட்ட கோபிநாத்தை கைது செய்து அவா் சிறையில் அடைத்தாா்.

இதேபோல திருச்செங்கோடு, மோா்பாளையத்தை சோ்ந்த குழந்தைவேலு மகன் சங்கா் (18) என்பவா் அதே ஊரை சோ்ந்த 15 வயது சிறுமியை குழந்தை திருமணம் செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியருக்கு புகாா் வந்தது. இதுகுறித்து விசாரணை நடத்திய திருச்செங்கோடு அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் ஹேமாவதி, சிறுமியை திருமணம் செய்த சங்கா் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.