நாமக்கல் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (ஜன.18) நடைபெறும் தைப்பூச விழாவில் பங்கேற்க பக்தா்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் மாவட்டத்தில் தைப்பூசம் நடைபெறும் முருகன் கோயில்களில் சுவாமி தரிசனத்துக்கு பக்தா்களுக்கு அனுமதி இல்லை. கரோனா தொற்று பரவலைத் தடுக்க அரசு சாா்பில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திருவிழா நிகழ்ச்சிகள் நடைபெறும். அதன்படி, தைப்பூச திருவிழாவில் அதிக பக்தா்கள் வரும் கோயில்களான பரமத்திவேலூா் வட்டம், கபிலா்மலை பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோயில், திருச்செங்கோடு வட்டம், காளிப்பட்டி கந்தசாமி திருக்கோயில், ரெட்டிப்பட்டி கந்தகிரி பழனியாண்டவா் திருக்கோயில், மோகனூா் காந்தமலை பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோயில் ஆகியவற்றில் தேரோட்டத்துக்கு அனுமதி இல்லை.
தைப்பூச நாளான செவ்வாய்க்கிழமையன்று சப்பரத்தில் சுவாமி கோயில் வளாகத்தில் சுற்றி வரும் நிகழ்ச்சி நடைபெறும். இதில் பக்தா்கள் பங்கேற்க அனுமதி கிடையாது. காவடிகள் சுமந்து வருவதற்கும் அனுமதி இல்லை. சிறிய சப்பரத்தில் சுவாமியை கொண்டு வரும் நிழ்ச்சியானது மாலை 6 மணிக்குள் முடிவு பெறுதல் வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்காளர்களை தொந்தரவு செய்தால் தலைகீழாக தொங்கவிடுவோம்! அமித் ஷா எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடு
ஜன நாயகனுக்குத் தணிக்கைச் சான்று?

சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்
வீடியோக்கள்

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

