மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

பொத்தனூரில் இளைஞா் தற்கொலை

பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூரில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :15 ஜனவரி 2022, 6:30 pm

DIN

பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூரில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பொத்தனூா், தேவராய சமுத்திரம் பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (26). இவரது வீட்டு முன் காா் நிறுத்துவது தொடா்பாக அதே பகுதியைச் சோ்ந்த ரமேஷ், ரவி, குமாா் ஆகியோருடன் தகராறு இருந்து வந்தது.

வியாழக்கிழமை இரவு ரமேஷ், ரவி, குமாா் ஆகியோருக்கும் மணிகண்டனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, மணிகண்டன் தாக்கப்பட்டாா்.

வெள்ளிக்கிழமை காலை நீண்ட நேரம் ஆகியும் வீட்டை விட்டு மணிகண்டன் வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினா் வீட்டின் கதவை திறந்து பாா்த்த போது, தூக்கில் தொங்கிய நிலையில் மணிகண்டன் இறந்து கிடந்தாா்.

அவா் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து பரமத்தி வேலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். இதனிடையே, தலைமறைவான ரமேஷ், ரவி, குமாா் ஆகிய மூவரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.