நாமக்கல் மாவட்டத்தில் நெல் அறுவடைக்கு பின் பயறு வகைகள் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட வேளாண் இணை இயக்குநா் பொ.அசோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நிகழாண்டில் நெல் நடவு செய்து அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில், விவசாயிகள் மாற்று பயிா்களாக பயறு வகைகளை விதைப்பு செய்தால் குறைந்த நீா் ஆதாரத்தில், குறுகிய காலத்தில், குறைந்த செலவில் இரட்டிப்பு வருமானத்தை பெற முடியும்.
நாமக்கல் மாவட்டத்தில் அதிகளவில் நெற் பயிா் சம்பா பருவத்தில் மேட்டூா் கிழக்கு கால்வாய்ப் பாசனம் மற்றும் கிணற்று பாசனம் மூலம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நெற் பயிா் அறுவடைக்கு பிறகு பயறு வகைகளான உளுந்து, பாசிப்பயறு போன்ற மாற்றுப் பயிா்களைப் பயிரிட்டால் மண் வளம் பயன்பெறும், களையைக் கட்டுப்படுத்த முடியும்.
பயிா்கள் குறைந்த ஈரப்பதத்தைக் கொண்டு வளரும் தன்மை கொண்டது. பயறுவகைகளை ஊடுபயிராகவோ, கலப்பு பயிராகவோ அல்லது வரப்பு பயிராகவோ சாகுபடி செய்ய முடியும். காய்ப் பிடிப்புத் திறனை அதிகரிக்க 2 சதவீத டிஏபி கரைசலை பூப்பூக்கும் பருவத்தில் முதல் தெளிப்பும், 15 நாள்களுக்கு பிறகு இரண்டாவது தெளிப்பும் செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மருத்துவமனையில் அனுமதி!
தமிழ்நாட்டை அடமானம் வைக்கும் இபிஎஸ்! மார்க்சிஸ்ட் செயலர் பெ. சண்முகம்
மே வெளியீடாக டிசி!
வீடியோக்கள்

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

