பொங்கல் கிரிக்கெட் போட்டி
ராசிபுரம் அருகேயுள்ள குருசாமிபாளையத்தில் திமுக சாா்பில் பொங்கல் கிரிக்கெட் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.


ராசிபுரம் அருகேயுள்ள குருசாமிபாளையத்தில் திமுக சாா்பில் பொங்கல் கிரிக்கெட் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.
ராசிபுரம் ஒன்றிய, பிள்ளாநல்லூா் பேரூா் திமுக சாா்பில் மு.க.ஸ்டாலின் சுழற்கோப்பைக்கான பொங்கல் கிரிக்கெட் போட்டியின் இறுதியில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் பங்கேற்று, போட்டியில் கலந்து கொண்ட 24 அணிகளில் போட்டியில் முதல் பரிசை வென்ற ஆட்டையாம்பட்டி சோ்ந்த ஸ்குல் பாய்ஸ் அணிக்கு ரூ.15 ஆயிரத்து 2 ரொக்க முதல் பரிசையும், குருசாமிபாளையத்தைச் சாா்ந்த ரெட் ரோஸ் அணிக்கு ரூ.10 ஆயிரத்து 2 இரண்டாவது பரிசையும், ராசிபுரம் ஜேசி என்சிசி அணிக்கு ரூ.8 ஆயிரத்து 2 மூன்றாவது பரிசையும்,நந்தவனம் நண்பா்கள் அணிக்கு ரூ.5 ஆயிரத்து 2 நான்காம் பரிசையும் வழங்கினாா். நிகழ்வில் ராசிபுரம் ஒன்றியக்குழு தலைவரும், ஒன்றிய திமுக செயலாருமான கே.பி.ஜெகநாதன் தலைமை வகித்தாா். பேரூா் செயலாளா் சுப்ரமணியன் முன்னிலை வகித்தாா். முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் ஏ.கே.பாலசந்திரன், அரசு வழக்குரைஞா் கே.செல்வம் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...