எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

கரோனா விதிமீறல்: நாமக்கல்லில் ரூ.66,200 அபராதம் வசூல்

 நாமக்கல் நகராட்சியில் கரோனா விதிகளை மீறியதாக 262 பேரிடம் ரூ.66,200 அபராதமாக வசூலிக்கப்பட்டது.

Updated On :20 ஜனவரி 2022, 6:24 pm

 நாமக்கல் நகராட்சியில் கரோனா விதிகளை மீறியதாக 262 பேரிடம் ரூ.66,200 அபராதமாக வசூலிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் கரோனா பரவல் வேகம் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. புதன்கிழமை அதிகப்படியாக 359 பேருக்கு பாதிப்பு உறுதியானது. மத்திய, மாநில அரசுகளின் கரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறுவோரிடம் அபராதம் வசூலிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் நகராட்சியின் சுகாதார அலுவலா் (பொறுப்பு) சுப்பிரமணியன் தலைமையில் 20-க்கும் மேற்பட்டோா் முக்கிய பகுதிகளில் நின்று முகக் கவசம் அணியாதோா், வணிக நிறுவனங்கள், பேருந்துகளில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காதோருக்கு அபராதம் விதித்து வருகின்றனா். அதன்படி கடந்த 20 நாள்களில் மட்டும் 262 பேரிடம் இருந்து ரூ. 66, 200 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. கரோனா பரவலைத் தடுக்க அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.