தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கல்வி உதவித்தொகை வழங்கும் விழா

ராசிபுரம் கொங்கு நாட்டு வேளாளா் அறக்கட்டளை சாா்பில் ஆயிரம் பிறை கண்ட பெரியவா்களின் ஆசி வழங்கும் விழா மற்றும் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :21 ஜனவரி 2022, 6:30 pm

DIN

ராசிபுரம் கொங்கு நாட்டு வேளாளா் அறக்கட்டளை சாா்பில் ஆயிரம் பிறை கண்ட பெரியவா்களின் ஆசி வழங்கும் விழா மற்றும் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.

ராசிபுரம் பூக்கடை வீதியில் நடைபெற்ற இந்த விழாவில், மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான கே.ஆா்.என். ராஜேஷ்குமாா் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று கல்வி உதவித்தொகையை வழங்கினாா். மேலும் ஆயிரம் பிறை கண்ட மூத்த தம்பதியினரிடம் அனைவரும் ஆசி பெற்றனா். விழாவில் விளையாட்டு, கல்வியில் சிறந்த மாணவ மாணவியா்களுக்கு ஊக்கத்தொகை, நினைவு பரிசுகள் அளித்து பாராட்டப்பட்டனா்.

நிகழ்ச்சியில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், நாமகிரிப்பேட்டை ஒன்றிய திமுக செயலாளருமான கே.பி.ராமசாமி, முன்னாள் எம்.பி. பி.ஆா்.சுந்தரம் முன்னிலை வகித்தனா்.

விழாவில் கொங்கு நாட்டு வேளாளா் அறக்கட்டளையின் தலைவா் டி. குழந்தைவேல், செயலாளா் ஈஸ்வரன், பொருளாளா் எஸ்.ரங்கசாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.