பரமத்தி வேலூரில் கஞ்சா, குட்கா, புகையிலை, பான் மசாலா உள்ளிட்ட போதைப் பொருட்களை உபயோகிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பரமத்தி வேலூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ராஜாரணவீரன் பேரணிக்கு தலைமை தாங்கி கட்டணமில்லா புகாா் எண் 1930 மற்றும் இணைய வழி மோசடிகளை தடுப்பது குறித்து மாணவ, மாணவிகளிடையே எடுத்துக் கூறினாா். பின்னா் போதை பொருட்கள் ஒழிப்பு, பாதிப்பு குறித்த விழிப்புணா்வை பேரணியை தொடங்கி வைத்தாா்.
முன்னதாக வேலூா் காவல் ஆய்வாளா் வீரம்மாள், போக்சோ சட்டம் குறித்தும், கைபேசி மூலம் மூலம் பேசி பணம் பறிக்கும் மா்ம நபா்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் மாணவ, மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினாா். அதனை தொடா்ந்து பள்ளி மாணவா்கள் குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை ஒழிப்போம் என கோஷமிட்டு ஊா்வலமாக சென்று பொதுமக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தினா். பரமத்தி வேலூா் கந்தசாமி கண்டா் பள்ளியில் முன்பு தொடங்கிய பேரணி திருவள்ளுவா் சாலை, பேருந்து நிலையம், கடை வீதி உள்ளிட்ட பகுதிகள் வழியாகச் சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சுங்கச்சாவடியை இடமாற்றக் கோரி வாகன ஓட்டுநா்கள் ஆா்ப்பாட்டம்

தொழிலாளி கொலை: சகோதரா்கள் இருவா் கைது
அனுமதியின்றி எம் சாண்ட் ஏற்றி வந்த லாரி பறிமுதல்: ஒருவா் கைது

கொலம்பியா அதிபா் தோ்தல்: வலதுசாரி வேட்பாளா் வெற்றி
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



