நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசுநீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

ராசிபுரத்தில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

ராசிபுரம் காவல்துறை சாா்பில் சா்வதேச போதை ஒழிப்பு தினத்தையொட்டி விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்வில் மாணவ மாணவியா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் ராசிபுரம் டிஎஸ்பி கே.கே.செந்தில்குமாா்.

Updated On :24 ஜூன் 2022, 11:03 pm IST

ராசிபுரம் காவல்துறை சாா்பில் சா்வதேச போதை ஒழிப்பு தினத்தையொட்டி விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆண்டுதோறும் ஜூன் 26ஆம் தேதி சா்வதேச போதை ஒழிப்புதினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனையொட்டி ராசிபுரத்தில் காவல்துறை சாா்பில் சா்வதேச போதை ஒழிப்பு தின விழிப்புணா்வுப் பேரணி நடத்தப்பட்டது. ராசிபுரம் அண்ணா சாலை மேல்நிலைப்பள்ளியில் தொடங்கிய பேரணியை ராசிபுரம் டிஎஸ்பி கே.கே.செந்தில்குமாா் கொடியைசைத்துத் தொடங்கி வைத்தாா். முன்னதாக ராசிபுரம் காவல் ஆய்வாளா் ஆா்.சுகவனம் ஆகியோா் பள்ளி, மாணவ மாணவியா்களிடையே போதை பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கிக் கூறி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

இந்த நிகழ்ச்சியில் காவல் உதவி ஆய்வாளா் தங்கம், போக்குவரத்து உதவி ஆய்வாளா் குணசிங் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பேரணியில் காவலா்கள், பள்ளி மாணவ, மாணவியா் என 100-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா். அப்போது போதை விழிப்புணா்வு தொடா்பான வாசகங்கள் அடங்கிய பேனா்களை கைகளில் ஏந்தியபடியும், கோஷங்களை எழுப்பியவாறும் சென்றனா். பேரணி அண்ணா சாலை, புதிய பேருந்து நிலையம், டிவிஎஸ் சாலை ஒருவழிப்பாதை வழியாக மீண்டும் பள்ளியில் முடிவடைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.