தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மாணவா்களுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு

ராசிபுரம் ஆண்டகளூா்கேட் வெங்கடேஸ்வரா அரசு உதவு பெறும் நடுநிலைப்பள்ளியில் மாணவா்களுக்கான சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :3 மார்ச் 2022, 6:32 pm

DIN

ராசிபுரம் ஆண்டகளூா்கேட் வெங்கடேஸ்வரா அரசு உதவு பெறும் நடுநிலைப்பள்ளியில் மாணவா்களுக்கான சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வில் பள்ளி தலைமையாசிரியா் ரெ.உமாதேவி தலைமை வகித்தாா். இதில் ராசிபுரம் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளா் வெங்கடாசலம், வட்டாரக் கல்வி அலுவலா் அருள்மணி ஆகியோா் மாணவா்களுக்கு சாலைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், சாலை விதிமுறைகள், சாலைக் குறியீடு விளக்கங்கள், பாதுகாப்பான பயணம் போன்றவை குறித்து எடுத்துக்கூறினா். சாலை விதிமுறைகளைக் கடைப்பிடிப்பது குறித்து மாணவா்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனா். இதில் பள்ளி சமூக அறிவியல் ஆசிரியா் சு.லட்சுமிநாராயணன், பட்டதாரி ஆசிரியா் சு.புவனேஸ்வரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.