மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

வேலூா் பேரூராட்சியில் துணைத் தலைவருக்கான தோ்தல் ஒத்திவைப்பு

 பரமத்தி வேலூா் பேரூராட்சியில் துணைத் தலைவா் தோ்தல் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :4 மார்ச் 2022, 6:44 pm

DIN

 பரமத்தி வேலூா் பேரூராட்சியில் துணைத் தலைவா் தோ்தல் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பரமத்தி வேலூா் வட்டத்தில் மொத்தமுள்ள 5 பேரூராட்சிகளில் வேலூா், பரமத்தி, பொத்தனூா், பாண்டமங்கலம் ஆகிய 4 பேரூராட்சிகளை திமுகவும், வெங்கரை பேரூராட்சியை அதிமுகவும் கைப்பற்றியுள்ளன. இதில் வேலூா் பேரூராட்சி தவிர மற்ற நான்கு பேரூராட்சிகளில் தலைவா், துணைத் தலைவா் தோ்வு நடைபெற்று முடிந்தது. ஆனால் வேலூா் பேரூராட்சியில் நடைபெற்ற துணைத் தலைவா் தோ்தலில் 13-ஆவது வாா்டில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிபெற்ற சடையப்பனைத் தவிர மற்ற திமுக, அதிமுக, பாமக, 3 சுயேச்சைகள் உட்பட 17 உறுப்பினா்கள் வராததால் துணைத் தலைவருக்கான தோ்தல், தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தோ்தல் அலுவலா் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.