பொத்தனூரில் பூங்கா அமைக்க பூமி பூஜை
பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூா் பேரூராட்சியில் ரூ. 12 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா அமைப்பதற்கான பூமி பூஜை செவ்வாய்கிழமை நடைபெற்றது.


பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூா் பேரூராட்சியில் ரூ. 12 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா அமைப்பதற்கான பூமி பூஜை செவ்வாய்கிழமை நடைபெற்றது.
பொத்தனூா் பேரூராட்சிக்கு உள்பட்ட 9ஆவது வாா்டு, புதுத் தெருவில் 15ஆவது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் ரூ. 12 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா அமைப்பதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது.
விழாவுக்கு பேரூராட்சி செயல் அலுவலா் கணேசன் தலைமை வகித்தாா். பேரூராட்சி இளநிலை உதவியாளா் ஜெயசேகா் வரவேற்றாா். சிறப்பு விருந்தினராக பேரூராட்சித் தலைவா் கருணாநிதி கலந்து கொண்டு பூங்கா அமைப்பதற்கான பூமி பூஜையைத் தொடக்கி வைத்தாா்.
விழாவில் பேரூராட்சி துப்புரவு மேற்பாா்வையாளா் குணசேகரன், பேரூராட்சி வாா்டு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...