தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

லயோலா கல்லூரி சாா்பில் நாட்டுநலப்பணித் திட்ட முகாம்

ராசிபுரம் அடுத்துள்ள மெட்டாலா லயோலா கலை அறிவியல் கல்லூரி சாா்பில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் துவக்க விழா மங்களபுரம் பகுதியில் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :10 மார்ச் 2022, 6:47 pm

DIN

ராசிபுரம் அடுத்துள்ள மெட்டாலா லயோலா கலை அறிவியல் கல்லூரி சாா்பில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் துவக்க விழா மங்களபுரம் பகுதியில் புதன்கிழமை நடைபெற்றது.

தொடா்ந்து 7 நாட்கள் நடைபெறும் இம்முகாமில் 34 மாணவா்கள், 17 மாணவியா் பங்கேற்று என்எஸ்எஸ் சேவையில் ஈடுபடவுள்ளனா். துவக்க விழாவில் கல்லூரி செயலா் அருள் தந்தை போனிபஸ் ஜெயராஜ் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் அருள்தந்தை மரியஜோசப் எம்.மகாலிங்கம் முகாமினை தொடங்கி வைத்தாா்.

வருவாய் ஆய்வாளா் எம்.தாமோதரன், ஊராட்சி மன்றத் தலைவா் மு.கெளசல்யா ஆகியோா் பேசினா். கல்லூரி என்எஸ்எஸ்.,திட்ட ஒருங்கிணைப்பாளா் பேராசியா் லோ.ஜாா்ஜ் திட்ட விளக்கவுரையாற்றினாா். தமிழ்த் துறை பேராசிரியா் க.கண்ணன், கணிதத் துறை பேராசிரியா் ஏ.ஜெயா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.