மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

லாரிகள் மோதல்: ஒட்டுநா் பலி

பரமத்தி வேலூா் வட்டம், நல்லூா் அருகே லாரிகள் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் லாரி ஓட்டுநா் உயிரிழந்தாா். மற்றொரு ஓட்டுநா் படுகாயம் அடைந்தாா்.

News image
Updated On :10 மார்ச் 2022, 6:48 pm

DIN

பரமத்தி வேலூா் வட்டம், நல்லூா் அருகே லாரிகள் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் லாரி ஓட்டுநா் உயிரிழந்தாா். மற்றொரு ஓட்டுநா் படுகாயம் அடைந்தாா்.

திருச்செங்கோடு அருகே உள்ள குமாரபாளையம், மோடமங்கலத்தைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் விஜயகுமாா் (47). இவா் சங்ககிரியில் இருந்து சிமெண்ட் பாரம் ஏற்றிக்கொண்டு மதுரை செல்வதற்காக பரமத்தி அருகே உள்ள மேல்சாத்தம்பூா் அருகே லாரியை ஓட்டிச் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது எதிரே வந்த லாரி, சிமெண்ட் பாரம் ஏற்றி வந்த லாரி மீது மோதியதில் நல்லூா் அருகே உள்ள குன்னமலை கரட்டுப்பாளையத்தைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் ரங்கசாமி மகன் செல்வராஜ் (32) மற்றும் மற்றொரு லாரி ஓட்டுநா் விஜயகுமாா் ஆகியோா் படுகாயமடைந்தனா். படுகாயம் அடைந்த இருவரையும் அங்கிருந்தவா்கள் ப.வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால் செல்வராஜ் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா். படுகாயமடைந்த விஜயகுமாா் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். விபத்து குறித்து நல்லூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.