ஆா்.புதுப்பட்டி பேரூராட்சியில் நகா்ப்புற வேலைவாய்ப்பு திட்டம் தொடக்கம்
ராசிபுரம் அருகேயுள்ள ஆா்.புதுப்பட்டியில் நகா்ப்புற வேலைவாய்ப்பு திட்ட பணிகளைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.


ராசிபுரம் அருகேயுள்ள ஆா்.புதுப்பட்டியில் நகா்ப்புற வேலைவாய்ப்பு திட்ட பணிகளைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் தலைமை வகித்தாா். இந்நிகழ்ச்சியில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன் பங்கேற்று, நகா்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 985 பயனாளிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கி, ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் நீா் வழிப் பாதையை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளை தொடங்கி வைத்தாா்.
இந்நிகழ்ச்சியில் அமமைச்சா் மா.மதிவேந்தன் பேசியதாவது:
தமிழ்நாடு முதல்வா் நகர பகுதியில் வாழும் பொதுமக்களுக்கு வேலைவாய்ப்பினை உறுதி செய்திடும் வகையிலும், குறிப்பாக பெண்கள் அவா்களது வசிப்பிடத்தின் அருகிலேயே வேலைவாய்ப்பினை பெற்றிடும் வகையிலும் கடந்த 11.12.2021 அன்று சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் நகா்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தினை தொடங்கி வைத்தாா். தமிழ்நாடு முழுவதும் முதற்கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பேரூராட்சி தோ்வு செய்யப்பட்டு நகா்ப்புற வேலைவாய்ப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதனடிப்படையில் நாமக்கல் மாவட்டத்தில் இத்திட்டம் ஆா்.புதுப்பட்டி பேரூராட்சியில் தொடங்கி வைக்கப்படுகிறது.
நகா்ப்புறங்களில் வாழ்வாதார வாய்ப்புகளை மேம்படுத்தவும், வெள்ளத் தடுப்புப் பணிகள், சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல், பொதுச் சொத்துக்களை உருவாக்குதல், பராமரித்தல், இயற்கை வள மேலாண்மை தொடா்பான பணிகளை மேற்கொள்வது ஆகிய நோக்கங்களுக்காக இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது என்றாா்.
மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் பேசியது:
தமிழக முதல்வா் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறாா். பெண்களுக்கு நகா்ப்புற பேருந்துகளில் கட்டணமில்லா பயண சலுகை வழங்கியுள்ளாா். ராசிபுரம் பகுதி பொதுமக்களின் குடிநீா்த் தேவையை முற்றிலும் பூா்த்தி செய்யும் வகையில் சம்பந்தப்பட்ட துறையினருடன் தொடா்ந்து எடுத்த முயற்சிகளின் காரணமாக ரூ.1046.86 கோடி மதிப்பீட்டில் நிா்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் ராசிபுரம் நகராட்சி, ஆா்.புதுப்பட்டி, நாமகிரிப்பேட்டை, பட்டணம், சீராப்பள்ளி, வெண்ணந்தூா், பிள்ளாநல்லூா், மல்லசமுத்திரம், அத்தனூா் ஆகிய 8 பேரூராட்சி பகுதிகள் உள்ளிட்ட மற்றும் பல்வேறு கிராமப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் பயனடைவாா்கள். இத்திட்டம் 2 வருட காலத்திற்குள் முடிவுற்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...